ரஷ்யா VS உக்ரைன் படைபலம் என்ன? | Russia | Ukraine

உக்ரைனை சுற்றிலும் ரஷ்ய படைகள் எங்கெல்லாம் உள்ளன, இரு நாடுகள் இடையிலான படைபலம் என்ன என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை காணலாம்...
x
உக்ரைனை சுற்றிலும் ரஷ்ய படைகள் எங்கெல்லாம் உள்ளன, இரு நாடுகள் இடையிலான படைபலம் என்ன என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை காணலாம்...

உலக வரைப்படத்தில் ஐரோப்பாவுக்கும் ரஷ்யாவுக்கும் மத்தியில் அமைந்திருக்கிறது உக்ரைன். 

ரஷ்யாவுடன் நீண்ட எல்லையை பகிர்ந்திருக்கும் உக்ரைனின் டொனட்ஸ்க் (Donetsk), லூஹான்ஸ்க் ( Luhansk) பகுதிகளில் ஏற்கனவே ரஷ்ய ஆதரவுப் பெற்ற கிளர்ச்சியாளர்கள் கடந்த 8 ஆண்டுகளாக உக்ரைன் படையுடன் சண்டையிட்டு வந்தனர்.  

2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரிமியாவிலும், உக்ரைனுடன் எல்லையை பகிரும் மால்டோவா மற்றும் பெலாரஸ் நாடுகளிலும் சிறிதும், பெரிதுமாக ஏற்கனவே ரஷ்ய படைகள் நிலை கொண்டிருந்தது.  

மறுபுறம் ரஷ்யா எல்லையையொட்டிய எஸ்டோனியா,     லாத்வியா, லித்துவேனியாவில் நேட்டோ படைகள் உள்ளன. பிரான்ஸ் மற்றும் சில நாடுகளை தவிர்த்து ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, போலந்து, செக் குடியரசு, ருமேனியா,  பல்கேரியா, துருக்கி உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளிலும் நேட்டோ படைகள் உள்ளன.

ராணுவம் பலத்தை பொறுத்தவரையில் ஒப்பீட்டளவில் ரஷ்யாவே பல மடங்கு ராணுவ பலத்தை கொண்டிருக்கிறது. ரஷ்ய படை வீரர்களின் எண்ணிக்கை 29 லட்சமாக இருக்கும் நிலையில், உக்ரைன் படை வீரர்களின் எண்ணிக்கை 11 லட்சமாக இருக்கிறது. ரஷ்யாவிடம் ஆயிரத்து 511 தாக்குதல் விமானங்கள் இருக்கும் நிலையில், உக்ரைனிடம் வெறும் 98 தாக்குதல் விமானங்களே உள்ளன. தாக்குதல் ஹெலிகாப்டர், டேங்கர்கள், ராணுவ வாகனங்கள், பீரங்கிகள் என போர் தளவாடங்கள் ரஷ்யாவிடமே அதிகமாக உள்ளன.

பெலாரசுக்கும் விமானப்படை விமானங்களை அனுப்பியிருக்கும் ரஷ்யா, உக்ரைனை சுற்றிலும் படையை நிறுத்தி தாக்குதலை தொடங்கியுள்ளது. 


கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகள்
 
ரஷ்யா
உக்ரைன்
 
டொனட்ஸ்க் 
லூஹான்ஸ்க்



ரஷ்ய படைகள்   

பெலாரஸ்
உக்ரைன்
ரஷ்யா
கிரிமியா
மால்டோவா



நேட்டோ படைகள் 

போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், நார்வே, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், துருக்கி,

எஸ்டோனியா, லாத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, குரோஷியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, வடக்கு மாசிடோனியா, அல்பானியா, மொண்டெனேகுரோ 



ரஷ்யா vs உக்ரைன் ராணுவ பலம்

ராணுவ வீரர்கள் 
ரஷ்யா - 29 லட்சம்
உக்ரைன் - 11 லட்சம்

போர் விமானம் 
ரஷ்யா -  1,511
உக்ரைன் - 98

போர் ஹெலிகாப்டர்
ரஷ்யா - 544
உக்ரைன் -  34

டேங்கர்கள் 
ரஷ்யா -12,240
உக்ரைன் -2,596

ராணுவ வாகனங்கள்
ரஷ்யா -30,122
உக்ரைன் -12,303

பீரங்கிகள்
ரஷ்யா - 7,571
உக்ரைன் -2,040


Next Story

மேலும் செய்திகள்