உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்த ரஷ்யா - உலக நாடுகள் கொந்தளிப்பு | Ukraine | Russia

உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்த ரஷ்யா - உலக நாடுகள் கொந்தளிப்பு
x
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் வசிக்கும் கிழக்கு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அறிவித்திருப்பதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றத்தால் உலக நாடுகள் சந்தித்து வரும் நெருடிக்கடியை மேலும் நெருக்கடியான அதிகரிக்கும் விதமாக கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் வசிக்கும் இந்த பகுதியில் உக்ரைன் அரசுக்கு, பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. அண்மையில் உக்ரைன் அரசு தங்களை தாக்குவதாக கூறி பிரிவினைவாதிகள் பலர் ரஷ்யாவில் தஞ்சமடைந்து வந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரஷ்யா, நாடாளுமன்ற ஒப்புதலுடன் அந்த பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மின்ஸ்க் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. ரஷ்யாவின் இந்த தனிச்சையான முடிவால் உலக நாடுகள் கொந்தளித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்