கால்பந்து வீரர் நெய்மரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட்டு
புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடிய விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்
புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடிய விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். நெய்மர் வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கியில் பணியாற்றும் அந்த நபர், நெய்மரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து இந்திய மதிப்பில் 28 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைத் திருடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் அந்த நபரைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story