5 நாட்களாக கிணற்றில் சிக்கித் தவித்த சிறுவன் உயிரிழப்பு - மொராக்கோ அரசர் இரங்கல்

5 நாட்களாக கிணற்றில் சிக்கித் தவித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் மொராக்கோ நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
மொராக்கோவில் ரேயன் ஓரம் என்ற 5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் இருந்த கினற்றில் தவறி விழுந்துள்ளான். சிறுவனின் அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், மீட்புக் குழுவினருக்குத் தகவல் அளித்துள்ளனர். 

கிணற்றின் வாய்ப் பகுதி ஒன்றரை அடி விட்டம் மட்டுமே இருந்த நிலையில், மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து சிறுவனுக்கு கயிற்றின் வழியாக உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், மீட்புக் குழுவினர் நெருங்குவதற்குள்ளாகவே சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து அந்நாட்டின் அரசர் 6ம் முகமது இறந்த சிறுவனின் குடும்பத்திற்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்