வலசை வரும் பறவைகளின் எமன் கண்ணாடிக் கட்டடங்கள் - 27 குருவிகள் பலி

கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வலசை வந்த ரோசி ஸ்டார்லிங் எனப்படும் சோளக் குருவிகள், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கண்ணாடி கட்டடங்களில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வலசை வந்த ரோசி ஸ்டார்லிங் எனப்படும் சோளக் குருவிகள், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கண்ணாடி கட்டடங்களில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரத் கூட்டுறவு வங்கியின் கண்ணாடி கட்டடத்தில் வழி தவறி மோதியதில் 27  குருவிகள் பலியாகின. மேலும் 10க்கும் மேற்பட்ட குருவிகள் தப்பிச் சென்று விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலசை வரும் பறவைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்பவை இந்த கண்ணாடிக் கட்டடங்கள். ஏனெனில், கண்ணாடியில் வானத்தின் எதிரொளிப்பைக் கண்டு பாதை தவறி கட்டடங்கள் மீது மோதி அவை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்