மீன் பிடிக்க சென்றதால் கோபம் - கணவனை ஏலம் விட்ட மனைவி

நியுசிலாந்தில், ஒரு பெண், தனது கணவனை விற்பனை செய்யவதாக வலை தளம் மூலம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
x
நியுசிலாந்தின் ரங்கிட்கெய் பகுதியில் விவசாயம் செய்து வரும் 37 வயதான ஜான் மெக்லிஸ்டர், தனது மனைவி லிண்டா மெகலிஸ்டர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பண்ணை விட்டில் வசித்து வருகிறார். மீன் பிடிப்பதில் ஆர்வம் உடைய ஜான், திடீரென்று இரண்டு நாட்கள் மீன் பிடிக்கும் பயணம் ஒன்றை மேற்கொண்டதால், கோபமடைந்த லிண்டா, தனது கணவனை விற்பனை செய்ய உள்ளதாக Trade me என்ற ஆன்லைன் ஏல தளத்தில், விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.  அவரை வாங்க 12 பெண்கள் ஆர்வம் காட்டினர். ஏலத் தொகை
100 டாலர் வரை உயர்ந்தது. ஆனால் சில மணி நேரங்களில் இந்த விளம்பரத்தை Trade me தளத்தில் இருந்து அதன் நிர்வாகிகள் நீக்கினர். இந்த விளம்பரம் மற்றும் எதிர்வினைகளை, லிண்டா, பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதற்கு பலரும் கிண்டலாக பின்னூட்டம் இட்டுள்ளனர். 





Next Story

மேலும் செய்திகள்