தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது 100 டாலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது 100 டாலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது. 3.8 கோடி மக்கள் தொகை கொண்ட வட அமெரிக்க நாடான கனடாவில், தினசரி கொரோனா தொற்றுதலின் சராசரி அளவு 39,456ஆக அதிகரித்துள்ளது. 84 சதவீதத்தினருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 77.8 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழி பேசும் மாகாணமான கியூபெக் மாகணத்தில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு 100 டாலர்கள் அபராதம் விதிகக்ப்படும் என்று மாகாண முதல்வர் பிரான்காய் லெகால் செவ்வாய் அன்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அங்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை ஜனவரி 11இல் 7,000ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 10இல் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கையை விட இது 2,000 அதிகமாகும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த, பொது இடங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Next Story