முன்னாள் அதிபர் டிரம்பின் பெயரை சேர்க்க வேண்டும் - ஈரான் எச்சரிக்கை
ஈரான் முன்னாள் தளபதி காசிம் சுலைமானி படுகொலை தொடர்பான விசாரணையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பெயரை சேர்க்காவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது.
ஈரான் முன்னாள் தளபதி காசிம் சுலைமானி படுகொலை தொடர்பான விசாரணையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பெயரை சேர்க்காவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது. டிரோன் தாக்குதலில், படுகொலை செய்யப்பட்ட, காசிம் சுலைமானியின் 2ம் ஆண்டு நினைவு தினம் ஈரானில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெஹ்ரானில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் இம்ராஹிம் ரைசி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்தான் காசிம் சுலைமானியின் படுகொலைக்குக் காரணம் என்றும், அவரது பெயரை விசாரணையில் ஐ.நா. சேர்க்காவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
Next Story