நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை சாவி ஏலம் விட முடிவு
தென் ஆப்பிரிக்க நாட்டின் முதல் அதிபரான நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டின் முதல் அதிபரான நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிற வெறிக்கு எதிராகப் போராடியவரும், அந்நாட்டின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலா வாழ்வில் 27 ஆண்டுகளை சிறையிலேயே செலவிட்டார். ராபன் தீவுகளில் உள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு சிறைக்காவலராக இருந்தவரும், மண்டேலாவின் நெருங்கிய நண்பருமான கிறிஸ்டோ பிராண்ட், நெலசன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விட முடிவு செய்துள்ளார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தென்ஆப்பிரிக்க அரசு, "இந்த சாவி தென்னாப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமானது" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story