சூடானில் பாலியல் வன்கொடுமை செய்த பாதுகாப்புப் படையினர்
சூடானில் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பாதுகாப்பு அதிகாரிகளால் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சூடானில் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பாதுகாப்பு அதிகாரிகளால் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 13 பெண்கள் போராட்டத்தின் போது கற்பழிக்கப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, ஏராளமான பெண்கள் போராட்டத்தில் குதித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், இராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்துவதற்காக பாதுகாப்புப் படையினர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும், என்ன நடந்தாலும் நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story