வேகமாக பாறை மீது மோதிய கப்பல் - நீரில் மூழ்கி 83 பேர் பலி
மடகாஸ்கர் கப்பல் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று பயணித்தது. நேற்று முன் தினம் அக்கப்பல் இந்திய பெருங்கடலில் விபத்திற்குள்ளாகி கவிழ்ந்த நிலையில், பல பயணிகள் நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடனடியாக விரைந்து வந்த கடலோரக் காவல் படையினர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். தண்ணீரில் தத்தளித்தவர்கள் கரை சேர்க்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் வேகமாக சென்று பாறையில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களின் உடல்கள் ஆங்காங்கே கரைகளில் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 83 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story