"ஒமிக்ரான், பெருந்தொற்றிற்கு முடிவு கட்டும்" - ரஷ்ய நிபுணர் நம்பிக்கை
ஒமிக்ரான் கொரோனா பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்று ரஷ்ய நிபுணர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா ஆபத்தானது அல்ல என்று, உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்ய கமலேயா தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர் பேராசிரியர் அனட்டோலி ஆல்ட்ஸ்டீன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உருமாறிய டெல்டா வைரசின் இடத்திற்கு ஒமிக்ரான் வந்து விடலாம் எனவும், இந்த வகை வைரஸ் பரவினால் நோய் கிருமித்தன்மை குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா தொற்று காய்ச்சலுடன் ஒப்பிடத்தக்க நிலைக்கு வந்து விட்டால், இந்த ஒமிக்ரானுடன் பெருந்தொற்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதே போல் சிங்கப்பூர் அமைச்சகம், ஒமிக்ரான் வைரசுடன் தொடர்புடைய அறிகுறிகள், பிற உரு மாறிய வைரஸ்களைக் காட்டிலும் தீவிரமானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story