27 நாடுகளுக்கு பரவிய 'ஓமிக்ரான்'
புதிய உருமாறிய கொரோனா வைரஸ் 27 உலக நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
முதல் முறையாக கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் தென் ஆப்பிரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஒமிக்ரான் பரவலை தடுக்க தற்போது 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயண விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஆனால் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்படுவதற்கு முன்னரே ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தில் கடந்த நவம்பர் 19 மற்றும் நவம்பர் 23 ஆம் தேதி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்ட இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே வசித்து வந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், நைஜீரியாவில் கடந்த அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரியில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒமிக்ரான் தொற்று எங்கு முதலில் உருவானது என்பது மர்மமாக நீடிக்கிறது.
ஆசியாவில் முதல் முறையாக தென் கொரியாவிலும்,
வளைகுடா நாடுகளில் முதல் முறையாக சவுதி அரேபியாவிலும், தென் அமெரிக்க நாடுகளில் முதல் முறையாக பிரேசிலும், வட அமெரிக்காவில் முதல் முறையாக கனடா நாட்டிலும், ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது அண்டார்டிகாவை தவிர உலகில் உள்ள 6 கண்டங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Next Story