ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலை நிறுத்த தவறிய நேட்டோ - தலிபான்கள் குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்த நேட்டோ தவறி விட்டதாக தலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேட்டோ என்று பரவலாக அறியப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பும் அமெரிக்காவும் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்த தவறி விட்டதாக ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முதாகி குற்றம் சாட்டியுள்ளார். 2 நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள அவர், இஸ்லாமாபாத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.
Next Story