வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - 14நாட்களுக்கு முன்பு 2வது டோஸ் செலுத்த வேண்டும்

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் இரு வாரங்களுக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்தி இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட பைடன் அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - 14நாட்களுக்கு முன்பு 2வது டோஸ் செலுத்த வேண்டும்
x
அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் இரு வாரங்களுக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்தி இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட பைடன் அரசு திட்டமிட்டுள்ளது. ஐரோப்பா, சீனா, இந்தியா உட்பட 33 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் இரு டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டால், நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமெரிக்கா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா தடுப்பூசி விதிமுறைகளில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர பைடன் அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அமெரிக்கா வர விரும்பும் வெளிநாட்டு பயணிகள் இரு வாரங்களுக்கு முன்னதாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்காக நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பூசிக்கான அமெரிக்க மையங்கள் மூலம் சர்வதேச விமான பயணிகளின் தகவல்களை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அல்லது பிற நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகள் விமான நிலையங்களிலேயே கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மீதான இந்த புதிய விதிமுறைகளில் 18 கீழ் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்