"இந்தியர் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டாம்" - கட்டுப்பாடுகளை தளர்த்திய இங்கிலாந்து அரசு
இங்கிலாந்து வரும் இந்தியர் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தியர்களுக்கான பயண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள இங்கிலாந்து அரசு, தடுப்பூசி செலுத்தியவரும், இங்கிலாந்து வரும் போது 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதித்திருந்தது. இது பாரபட்சமானது என கூறப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால், இந்தியா வரும் இங்கிலாந்து பயணிகளும், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியது.
இந்நிலையில், இந்தியர்களுக்கான பயண கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு திரும்ப பெற்றுள்ளது. கோவிஷீல்டு அல்லது இங்கிலாந்து அங்கீகரித்த தடுப்பூசியின் 2 தவணை எடுத்துக் கொண்ட இந்தியர்கள், வரும் அக்டோபர் 11 முதல் தங்கள் தனிமைப் படுத்திக் கொள்ளத் தேவையில்லை என இந்தியாவுக்கான இங்கிலாந்து நாட்டின் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் அறிவித்துள்ளார்.
Next Story