ஓமனை தாக்கிய ஷாஹீன் புயல் - வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், கார்கள்

வளைகுடா நாடான ஓமனை தாக்கிய ஷாகீன் புயல் ஏற்படுத்திய வெள்ளச் சேதங்கள், உயிரிழப்புகள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
ஓமனை தாக்கிய ஷாஹீன் புயல் - வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், கார்கள்
x
வளைகுடா நாடான ஓமனை தாக்கிய ஷாகீன் புயல் ஏற்படுத்திய வெள்ளச் சேதங்கள், உயிரிழப்புகள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன், பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் ஈரான், ஓமன் ஆகிய நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இந்த புயல் கரையைக் கடந்த நிலையில், ஓமனின் வடக்குக் கடற் கரையோரப் பகுதிகளில்150 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியது. கடும் மழை பொழிவு ஏற்பட்டது. இதனால், பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஒமனின் வடக்கு பகுதியில் உள்ள அல் படினா மாகாணத்தில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீரில் மூழ்கியும், நிலச்சரிவினாலும் உயிரிழப்பு ஏற்பட்டது. அல் கபூரா பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கார்கள், வாகனங்கள் மூழ்கியுள்ளன.

புயல் காற்றில் ஏராளமான மின் கம்பங்கள்,  கோபுரங்கள் சரிந்துள்ளதால், பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. ஏராளமான வீடுகள், கட்டிடங்கள்
சேதமைடைந்துள்ளன.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பலர் மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்கின்றன.

அடுத்த சில நாட்களில் ஒமனின் சில பகுதிகளில் 500 மில்லி மீட்டர் வரை  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்