ஐரோப்பிய தூதுக்குழு இலங்கை பயணம் - இலங்கை அதிபருடன் தூதுக்குழு சந்திப்பு
இலங்கை சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உடன் சந்தித்து பேசினர்.
இலங்கை சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உடன் சந்தித்து பேசினர். கொழும்புவில் உள்ள அதிபர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு இலங்கை அதிபரை தூதுகுழுவினர் வலியுறுத்தினர். அப்போது பேசிய கோட்டாபயா ராஜபக்ச, கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டகாரர்கள் மீது எந்தவொரு தடியடித் தாக்குதலும் நடத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story