வௌியுறவு செயலாளர் 4 நாள் இலங்கை பயணம் - இந்தியன் ஆயில் சேமிப்பு கிடங்குகளில் ஆய்வு

ஈழ தமிழர்களின் விருப்பங்களை இலங்கை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார்.
வௌியுறவு செயலாளர் 4 நாள் இலங்கை பயணம் - இந்தியன் ஆயில் சேமிப்பு கிடங்குகளில் ஆய்வு
x
ஈழ தமிழர்களின் விருப்பங்களை இலங்கை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார். நான்கு நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள  வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, திருகோணமலையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிபொருள் சிமிப்பு கிடங்குகளை பார்வையிட்டார். பின்னார் யாழ்ப்பாணம் சென்ற ஷ்ரிங்லா, அங்கு இந்தியா அமைத்துள்ள  கலாசார மண்டபத்தை பார்வையிட்டார். இந்நிலையில் வீரகேசரி பத்திரிகைக்கு பேட்டி அளித்த அவர், 13 ஆவது அரசியலமைப்பு திருத்த‌த்தை இலங்கை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இலங்கையில் சமத்துவம், நீதி தொடர்பான தமிழ் மக்களின் விருப்பங்களை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், இலங்கையின் முன்னேற்றத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்தார்.



Next Story

மேலும் செய்திகள்