கத்தாரில் முதல் முறையாக பொதுத்தேர்தல் - 44 சதவீத வாக்குகள் பதிவு

மன்னராட்சி நடைபெறும் கத்தாரில் முதல் முறையாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் முதல் முறையாக பொதுத்தேர்தல் - 44 சதவீத வாக்குகள் பதிவு
x
மன்னராட்சி நடைபெறும் கத்தாரில் முதல் முறையாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஷூரா சபையின் 49வது ஆண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மன்னர் ஷேக் தமிம், இந்த ஆண்டு அக்டோபரில் ஷூரா சபைக்கான முதல் பொதுத்தேர்தல் நடைபெறும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மன்னர் ஷேக் தமிம் அறிவித்தபடி, கத்தாரில் நேற்று முதல் முறையாக பொதுத்தேர்தல் நடைபெற்றது. 30 உறுப்பினர்களின் பதவிக்கு மொத்தம் போட்டியிட்ட 233 பேரில், 26 பேர் மட்டுமே பெண்கள். நாட்டில் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் கத்தார் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

Next Story

மேலும் செய்திகள்