டிவிட்டர் கணக்கு முடக்கத்திற்கு எதிராக வழக்கு - தலிபான்கள் டிவிட்டர் கணக்கு வைத்திருப்பதாக வாதம்
தனது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதிகளாக கருதப்படும் தலிபான்கள் தங்களது வெற்றி மற்றும் தாக்குதல்களை டிவிட்டரில் பதிவிடுவதாக சுட்டிக்காட்டினார்.
தனது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதிகளாக கருதப்படும் தலிபான்கள் தங்களது வெற்றி மற்றும் தாக்குதல்களை டிவிட்டரில் பதிவிடுவதாக சுட்டிக்காட்டினார். அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நாடாளுமன்றத்தில் வெடித்த கலவரத்திற்கு டிரம்பின் டிவிட்டர் பதிவு காரணம் என கூறி அவரின், டிவிட்டர் பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியது. இந்த நிலையில் டிவிட்டர் கணக்கு முடக்கம் தொடர்பாக புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டிரம்ப், டிவிட்டரில் தன்னை 88 மில்லியன் பேர் பின் தொடர்ந்ததாகவும், சிலரின் அழுத்தத்தால் டிவிட்டர் கணக்கை முடக்கியது ஜனநாயக விவாதத்திற்கு மிகவும் ஆபத்தானது என முறையிட்டார்.
Next Story