சீனாவில் தொடர் மின்வெட்டு - தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு

சீனாவில் நாடு தழுவிய அளவில் மின் வெட்டுகள் அதிகரித்துள்ளதால், அங்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
சீனாவில் தொடர் மின்வெட்டு - தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு
x
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, உலகின் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 28.7 சதவீதமாக உள்ளது.சீனாவின் மின்சார தேவைகளில் 56.8 சதவீதம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2020இல் உலகின் மொத்த அனல் மின் உற்பத்தியில் சீனாவின் பங்கு 53 சதவீதமாக அதிகரித்தது.கடந்த சில வாரங்களாக சீனாவின் பல மாகாணங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.கொரோனா பாதிப்புகளினால் நிலக்கரி உற்பத்தி மற்றும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் நிலக்கரி தேவைகளில் 7.5 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. சீனாவின் நிலக்கரி இறக்குமதியில் சுமார் 75 சதவீதம் ஆஸ்த்ரேலியாவில் இருந்து செய்யப்படுகிறது. சீனாவின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறிப்பட்டதால், அதைப் பற்றி தீவிர விசாரணை தேவை என்று ஆஸ்த்ரேலியா வலியுறுத்திய பின், இரு நாடுகளுக்கிடையே மோதல் உருவானது.இதைத் தொடர்ந்து ஆஸ்த்ரேலியாவில் இருந்து நிலக்கரி மற்றும் இதர இறக்குமதிகளை சீனா நிறுத்தியது. ரஷ்யா, மங்கோலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து செய்யப்படும் நிலக்கரி இறக்குமதிகளை அதிகரித்தது. ஆனாலும், நிலக்கரி பற்றாக்குறை உருவாகி, மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி விலை
கடுமையாக அதிகரித்துள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66 சதவீத பங்களிப்பு கொண்ட17 மாகாணங்களில், மின் வெட்டுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. டெஸ்லா, ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2021க்கான, சீனாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பை, கோல்ட்மென் சாக்ஸ் என்ற பிரபல அமெரிக்க வங்கி 8.2 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீதமாக குறைத்துள்ளது.மின்சார பற்றாகுறையை சமாளிக்க, ஆஸ்த்ரேலியாவுடனான மோதல் போக்குகளை கைவிட்டு விட்டு, விரைவில் ஆஸ்த்ரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதிகளை சீனா மேற்கொள்ளும் என்று கருதப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்