ஆப்கானிஸ்தான் நிலவரம்: வல்லரசுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் அடுத்தடுத்து இந்தியா வருகை
ஆப்கானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், வல்லரசு நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் வரிசையாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளனர். இது குறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, பாகிஸ்தான் உதவியுடன் அங்கு பயங்கரவாதம் மேலும் வலுப்பெறலாம் என இந்தியா கவலைக்கொண்டுள்ளது.
ஆப்கானை விட்டு வெளியேறிய அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் மத்தியிலும் இந்த கவலை நிலவுகிறது. அமெரிக்க படைகள் வெளியேறியதை வரவேற்கும் ரஷ்யாவும், பயங்கரவாதம் பெருகலாம் என அச்சத்தை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டது.
ஆப்கானிலிருந்து பயங்கரவாதம் ரஷ்யா, இந்தியாவுக்கு பரவலாம் என்றும், இந்த விவகாரத்தில் இந்தியா, ரஷ்யாவின் நிலைப்பாடு பொதுவானதே எனக் கூறியிருக்கிறார் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷெவ். பயங்கரவாதம், போதைப்பொருள், ஆயுத விற்பனையால் அமைதி பாதிக்கும் என்றும் ரஷ்யா கவலைக்கொண்டுள்ளது.
இந்நிலையில் பிராந்திய பாதுகாப்புக்கும், பயங்கரவாத செயல்பாடு குறித்த உளவுத்துறை உள்ளீடுகளை பெறவும் இந்தியாவின் ஒத்துழைப்பை அந்நாடுகள் எதிர்பார்க்கின்றன.
அந்த வகையில் பிரிட்டன் ரகசிய உளவுப்பிரிவு தலைமை அதிகாரி ரிச்சர்ட் மூரே, அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் தலைவர் வில்லியம் ஜே பர்ன்ஸ் இந்தியாவிற்கு வந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆப்கான் விவகாரம் குறித்து ஆலோசனையை மேற்கொண்டனர்.
Next Story