பிரான்ஸ் அதிபரின் ஈராக் சுற்றுப்பயணம் - 2 நாள் சுற்றுப்பயணம் நிறைவு
பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், ஈராக்கில் தனது 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், ஈராக்கில் தனது 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார். பாக்தாத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் பலருடன் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். ஈராக் நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் ஈராக்கில் உள்ள பிரஞ்சுப் படைகளைச் சந்திப்பதற்காக இமானுவேல் மேக்ரான் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டது குறிபிடத்தக்கது.ஈரானின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் சிரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன், நேற்று சிரியா சென்று அங்கு அதிபர் பாஷர் அல் அசத் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபைசல் மெக்தாத்தைச் சந்தித்தார். அப்போது பேசிய அதிபர் அசாத், சிரியா மற்றும் ஈரானின் ஒத்துழைப்பு, பல முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும் என்றும், குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டங்களில் இருநாடுகளின் ஒத்துழைப்பு முக்கியம் என்றும் தெரிவித்தார். ஆப்கனிஸ்தானில் இருந்து புதிய அகதிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் மெவ்லட் கெவுஸ்லொகு, ஏற்கனவே துருக்கி சார்பாக மனிதாபிமான அடிப்படையில் புலம்பெயர்பவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக ஆப்கானில் இருந்து புலம் பெயர்ந்து வருபவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். துருக்கியில் ஏற்கனவே 37 லட்சம் சிரிய அகதிகளும், 3 லட்சம் ஆப்கான் அகதிகள் வசிக்கும் நிலையில், புதிதாக யாரையும் ஏற்றுக் கொள்ளும் திட்டம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.ஜெர்மனி நாட்டின் பெர்லினில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கினர். அந்நாட்டில் கொரோனா 4வது அலை பரவத் துவங்கியுள்ளதாக அரசு தெரிவித்திருந்த நிலையில், வெளியிடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசியோ அல்லது நெகட்டிவ் சான்றிதழோ அவசியம் என்று தெரிவித்திருந்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர். ஆப்கானில் இருந்து மக்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக, பிரிட்டன் ராயல் விமானப் படை தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த அதிகாரிகள், காபூலில் இருந்து இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் மிட்கப்பட்டுள்ளதாகவும், பெரும் மீட்பு முயற்சி நிறைவடைந்ததாகத் தெரிவித்தனர். பிரிட்டனின் கடைசி இராணுவ விமானம் கடந்த 28ம் தேதி காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இஸ்ரேல் நாடு ஏற்கனவே 2 கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்க வயது வரம்பைக் குறைத்துள்ளது. ஃபைசர் கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோசாக வழங்க முடிவு செய்த இஸ்ரேல், கடந்த 1 மாதத்திற்கு முன்பே, வயதானோருக்கு தடுப்பூசியைச் செலுத்தியது. படிப்படியாக வயது வரம்பைக் குறைத்து வந்த அரசு, தற்போது 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாராக இருப்பினும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி ஏற்கனவே செலுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story