பொலிவியாவில் பரவிய காட்டுத் தீ: கார்பன் மோனாக்சைடு வாயு தாக்கம்
பொலிவியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஏராளமான விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.
தெற்கு பொலிவியாவின் சான்டா க்ரூஸ் பகுதியில் பற்றிய காட்டுத் தீயானது, நெம்பி குவாசு பகுதி வரை பரவியது. இதனால் கார்பன் மோனாக்சைடு வாயு தாக்கி, பறவைகள் மற்றும் விலங்குகள் பல உயிரிழந்தன. இந்தத் தீ விபத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் எரிந்து சாம்பலாகின. அதீத வெப்பம், பலத்த காற்று, வறட்சி ஆகியவற்றால் காட்டுத் தீ ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Next Story