"இதுவரை 82,300 பேர் மீட்பு" - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் இருப்போரை மீட்கும் பணி, இந்த மாத இறுதிக்குப் பிறகும் தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
இதுவரை 82,300 பேர் மீட்பு - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு
x
தலிபான்கள் வசம் சென்றுள்ள ஆப்கானிஸ்தானில் இருப்போரை ராணுவத்தின் மூலம் அமெரிக்கா தொடர்ந்து மீட்டு வருகிறது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், மீட்பு நடவடிக்கைகளை ஆகஸ்ட் 31-க்குள் முடிக்க முயற்சிக்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் கூறி இருந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 31-க்குப் பிறகும், ஆப்கானிஸ்தானில் இருப்போர் மீட்கப்படுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறி உள்ளார். ராணுவ மீட்பு நடவடிக்கைகள் முடிந்தாலும், வெளியேற விரும்புவோர் வெளியேறலாம் என்று கூறியுள்ள பிளிங்கன், ஆப்கனில் இருந்து இதுவரை 82 ஆயிரத்து 300 பேர் மீட்கப்பட்டு இருப்பதாக கூறினார். அமெரிக்கா இந்த மாத இறுதிக்குப் பிறகு, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என தலிபான்கள் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கா இவ்வாறு கூறியிருப்பது பதற்றத்தை கூட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்