ஆப்கன் மீட்பு பணி - பைடன் விளக்கம்

ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், வருகிற 31-ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருப்போர் மீட்கப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
ஆப்கன் மீட்பு பணி - பைடன் விளக்கம்
x
தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா தொடர்ந்து மீட்டு வருகிறது. 

ஆப்கனைச் சேர்ந்தவர்களும் அகதிகளாக மீட்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் மீட்பு நடவடிக்கைகள், அமெரிக்க படைகள் வெளியேறும் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ஆப்கனில் சிக்கி இருப்போரை  மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார்.

ஆப்கனின் அசாதாரண சூழலை ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறிய பைடன்,

அப்பாவி ஆப்கன் மக்களையும், அமெரிக்கர்களையும் தீவிரவாத அமைப்புகள் இலக்காக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார். 

இதனால், மக்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31-ம் தேதியை தாண்டாது என நம்பிக்கை தெரிவித்த பைடன்,

இழப்புகள் இல்லாமல் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறாது என்றும், காபூல் விமான நிலையத்தில் அரங்கேறிய சம்பவங்கள் தனக்கு வலியை ஏற்படுத்தியதாகவும் கூறினார். 

இதனிடையே, ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் உள்ளிட்ட 35 ஆயிரத்து 500 பேரை இதுவரை மீட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்