அமெரிக்க படைகளை திரும்பப் பெறும் காலக்கெடுவை நீட்டிக்க அவசியம் ஏற்படாது - பைடன் நம்பிக்கை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் வரும் 31 ஆம் தேதியுடன் முழுவதுமாக வெளியேறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து, அந்நாட்டில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களை மீட்பதில் ஜோ பைடன் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த ஜோ பைடன், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை வெளியேற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும்,
கடந்த 10 நாட்களில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
வரும் 31ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்கர்களும் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்த ஜோ பைடன்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
இருந்தபோதும், அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கான இறுதி கெடுவை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.
Next Story