இலங்கையில் கட்டுக்கடங்காத கொரோனா - பத்து நாள் ஊரடங்கு உத்தரவு அமல்
அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் பத்து நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் பத்து நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள அண்டைய நாடான இலங்கையில், தினசரி கொரோனா பரவல் என்பது கட்டுக்கடங்காமல் பதிவாகி வருவது.நிலைமையை அங்கு மோசமாக்கியுள்ளது.நாளொன்றுக்கு எட்டாயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் நிலையில், தினசரி 180 பேர் வரை கொரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா நோயாளிகளால் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழியும் நிலையில், இதே நிலை நீடித்தால் நிலைமை கைமீறி போய்விடும் என மருத்துவ குழுவினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 30ம் தேதி வரை10 நாள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவரும் திங்கட் கிழமை முதல் இரவு பத்து மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.22 லட்சம் மக்கள் தொகை கொண்ட இலங்கையில், இதுவரை சுமார் மூன்று லட்சத்து 80 ஆயிரம் பேர் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.ஆனால் இதுவரை வெறும் 38 சதவீதம் பேருக்கு மட்டும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது கவலையளிப்பதாக உலக சுகாதாரத்துறை குழுவினர் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதே வேளையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கும் பணியில் இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story