"இது வரலாற்றில் மிகவும் கடினமானது" - ஆப்கானிஸ்தான் குறித்து ஜோ பைடன் கருத்து

ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களை வெளியேற்று​ம் பணி முன் எப்போதும் இல்லாத வகையில் கடினமாக இருப்பதாகவும் களத்தில் போராடும் அமெரிக்க ராணுவத்தினரின் முடிவை யூகிக்க முடியாது எனவும் அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
இது வரலாற்றில் மிகவும் கடினமானது - ஆப்கானிஸ்தான் குறித்து ஜோ பைடன் கருத்து
x
ஆப்கானிஸ்தான் மீட்பு பணி தொடர்பாக, அமெரிக்க வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன், காபூலில் இருந்து மக்களின் வெளியேற்றத்திற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்றும், 

வரலாற்றில் இது மிகவும் கடினமான, விமானம் வழியான மீட்பு பணி எனவும் குறிப்பிட்டார். எனினும், ஒவ்வொருவரையும் மீட்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்கும் எனவும் அவர் கூறினார்.  

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாதாரமான சூழலில் விளைவு என்னவாக இருக்கும் என்பதை தன்னால் உறுதியாக கூற முடியாது என்ற அதிபர் பைடன், இழப்புகள் தவிர்க்கப்படும் என நம்பிக்கை அளித்தார். 

அங்குள்ள அமெரிக்கர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காகவே தலிபான்களுடனான தொடர்பு நீடிப்பதாக கூறிய அவர்,  

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அமெரிக்கர்களையும் மீட்பது தான் தனது குறிக்கோள் எனவும், களத்தில் நின்று போராடும் அமெரிக்க ராணுவத்தினரின் முடிவை யூகிக்க முடியாது எனவும் மறைமுகமாக தலிபான்களை எச்சரித்துள்ளார். 

ஆகஸ்ட் 14ம் தேதியில் இருந்து இதுவரை 13000 பேரும், ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை மொத்தமாக 18000 பேரும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவால் வெளியேற்றப்பட்டுள்ளாதகவும் பைடன் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்