12-17 வயதினருக்கு தடுப்பூசி பரிசோதனை - அனுமதி கேட்கும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்
12 வயது முதல்17 வயதானவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம், ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் மட்டுமே கொண்ட தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசிடம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
Next Story