மெக்சிகோவில் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு - 2,50,000ஐ கடந்த இறப்பு எண்ணிக்கை
மெக்சிகோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைக் கடந்துள்ளது.
மெக்சிகோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் கடுமையான பயணக்காட்டுப்பாடு உள்ள நாடுகளின் வரிசையில் மெக்சிகோவை இங்கிலாந்து சிவப்பு பட்டியலில் வைத்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் புதிய அலையில், இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஒருநாளில் மட்டும் 23 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 850 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ தெரிவித்துள்ளது.
Next Story