காபூல் விமான நிலையத்தில் 6000 பேர்; துரிதமாக மீட்க நடவடிக்கை - அமெரிக்கா

காபூல் விமான நிலையத்தில் ஆறாயிரம் பேர் இருப்பதாகவும், அவர்களை விரைவாக மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காபூல் விமான நிலையத்தில் 6000 பேர்; துரிதமாக மீட்க நடவடிக்கை - அமெரிக்கா
x
காபூல் விமான நிலையத்தில் ஆறாயிரம் பேர் இருப்பதாகவும், அவர்களை விரைவாக மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றினாலும், காபூல் விமான நிலையம் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் காபூலில் உள்ள ஏராளமானோர் விமான நிலையத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையில் உள்ள 6000 பேரை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ், கடந்த 24 மணி நேரத்தில் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவர்களை மீட்க விமானங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மீட்பு பணியில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அவர், கடந்த 14ம் தேதியில் இருந்து இதுவரை ஏழாயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். இதனிடையே ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு, உளவுத்துறை நடவடிக்கை மற்றும் ஹமித் கர்சாய் விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆலோசனை மேற்கொண்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்