யார் இந்த அம்ருல்லா சாலே?
ஆப்கான் அதிபர் தலைமறைவாகிவிட்டதால் நான் தான் அதிபர் என அறிவித்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்ருல்லா சாலே.. யார் இந்த அம்ருல்லா சாலே? விரிவாக பார்ப்போம்..
ஆப்கான் அதிபர் தலைமறைவாகிவிட்டதால் நான் தான் அதிபர் என அறிவித்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்ருல்லா சாலே.. யார் இந்த அம்ருல்லா சாலே? விரிவாக பார்ப்போம்..அமெரிக்கா படைகளை வாபஸ் பெறுகிறோம் என அறிவித்தவுடன், உள்நாட்டில் போரை தொடங்கிய தலிபான்கள், தலைநகரான காபூலை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டதாக அறிவித்தனர்.அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி அபுதாபியில் தஞ்சமடைய, காபூலில் உச்சக்கட்ட பதற்றம் நீடித்தது.
இந்த சூழலில், துணை அதிபராக இருந்த அம்ருல்லா சாலே, செவ்வாயன்று டிவிட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு புயலை கிளப்பினார். ஆப்கன் சட்டப்படி, அதிபராக இருப்பவர் ராஜினாமா செய்தாலோ, தப்பியோடினாலோ, உயிரிழந்தாலோ துணை அதிபர் தான் காபந்து அதிபர் என்பதால் நான் தான் அதிபர் என அறிவித்தார்.இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க, யார் இந்த அம்ருல்லா சாலே என கேள்வி எழுந்துள்ளது.
Next Story