பார்க்கர் விளையாடும் ரோபோக்கள் - மனிதர்களை போன்று சாகசம்

அமெரிக்காவில் தனியார் நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன ரோபோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் சிறப்பம்சம் என்ன? விரிவாக பார்ப்போம்
பார்க்கர் விளையாடும் ரோபோக்கள் - மனிதர்களை போன்று சாகசம்
x
அமெரிக்காவில் தனியார் நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன ரோபோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் சிறப்பம்சம் என்ன? விரிவாக பார்ப்போம்.நகர் பகுதிகளில் கட்டடங்கள் மிகுந்த இடங்களில் வேகமாக ஓடுதல், நீண்ட தூரத்தை சுலபமாக தாண்டுதல், கஷ்டமான இடத்தில் அதிவேகமாக ஏறுதல் போன்ற சாகசங்கள் நிறைந்த விளையாட்டு தான் இந்த பார்க்கர்.இதுபோன்ற விளையாட்டுகளில் ஒரு ரோபோ ஈடுபட்டால் எப்படி இருக்கும்... இந்த முயற்சியில்தான் இறங்கியுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த Boston Dynamics என்ற நிறுவனம்.5 அடி உயரம், 86 கிலோ எடையுடன் அட்லஸ் என்ற பெயரில் இரண்டு நவீன ரோபோக்களை வடிவமைத்துள்ளது இந்த நிறுவனம்.இயல்பாக ஒரு இளைஞரின் செயல்பாடு எப்படி இருக்குமோ, அதனை மையமாக வைத்து இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. வேகமாக ஓடுவது, உடற்பயிற்சி செய்வது, பல்டி அடிப்பது என மனிதர்களை கண்முன் நிறுத்துகிறது இந்த அட்லஸ் ரோபோக்கள்..கூடுதலாக பார்க்கர் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்தும் போது, தொழில்நுட்பத்தில் உள்ள சவால்களை அறிந்து அதனை சரி செய்ய முடிகிறது என அந்த நிறுவனத்தினர் கூறுகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்