"பணத்தை எடுத்துச் செல்லவில்லை" - ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம்
ஆப்கானிஸ்தானில் இருந்து, தான் கட்டுக் கட்டாக பணத்தை எடுத்துச் சென்றதாக கூறுவது முற்றிலும் தவறானது என ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி கூறி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து, தான் கட்டுக் கட்டாக பணத்தை எடுத்துச் சென்றதாக கூறுவது முற்றிலும் தவறானது என ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி கூறி உள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் அதிபர் அஷ்ரப் கனி, பாதுகாப்பு கருதி அங்கிருந்து தப்பி ஓடினார். தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்து உள்ளார். இந்த நிலையில், ஆப்கன் ரத்தக் களறியாக மாறுவதை தவிர்க்கவே, நாட்டை விட்டு வெளியேறியதாக அஷ்ரப் கனி கூறி உள்ளார். ஃபேஸ்புக் நேரலையில் பேசிய அவர், ஆப்கன் அரசு அதிகாரிகளின் வலியுறுத்தலின்பேரிலே, தான் ஆப்கனைவிட்டு சென்றதாக தெரிவித்தார். மேலும், தான் கட்டுக் கட்டாக பணத்தை எடுத்துச் சென்றதாக கூறுவது முற்றிலும் தவறு என்றும், பணத்தை எடுத்துச் சென்றதாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்ற, அரசியல் ஆதாயத்துக்கான குற்றச்சாட்டு என்றும் அவர் விமர்சித்து உள்ளார்.
Next Story