ஆப்கன் அரசில் பெண்களுக்கு பங்கு: தலிபான் செய்தித்தொடர்பாளர் தகவல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை சேர்ந்தவருடன் அந்நாட்டு பெண் நெறியாளர் நேர்காணல் நடத்தியது கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 2 நாட்கள் கடந்த பின்னரும், இன்னமும் அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது
1996 முதல் 2001 வரை ஆப்கானை தலிபான்கள் ஆட்சி செய்த போது அவர்கள் கடைப்பிடித்த கடுமையான சட்டங்கள் தான் காரணம்...
பெண்கள் பணிக்கு செல்லக்கூடாது, கல்வி பயில கூடாது என அவர்கள் விதித்த சட்டங்கள் தான், இப்போது கூட்டம் கூட்டமாக மக்கள் நாட்டை விட்டே தப்பியோட காரணமாக சொல்லப்படுகிறது.
இதனால் பணிக்கு சென்ற பெண்கள் எல்லாம் வீடுகளில் முடங்க, தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் பெண் ஊழியர்கள் பணியை தொடங்கியுள்ளனர்.
தலிபான்களுடன் பெண் நெறியாளர் ஒருவர் நேர்காணல் நடத்திய காட்சிகள் கவனத்தை ஈர்த்துள்ளன..
Next Story