ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போர் : வெளியேறிய அமெரிக்க படைகள் - பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர்
ஆப்கன் உள்நாட்டுப் போரில் எத்தனை அமெரிக்க தலைமுறைகளை இழக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க படைகளின் வெளியேற்றம் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கத்திற்கு காரணம் என்று பல நாடுகள் குற்றம் சாட்டின. அவர்களுக்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கன் இராணுவக் குழுக்கள் அதன் உள் நாட்டுப்போரில் சண்டையிடாமல், "இன்னும் எத்தனை தலைமுறை அமெரிக்க பிள்ளைகளை அங்கு போரில் பங்கேற்க அனுப்ப முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது முடிவில் உறுதியாய் இருப்பதாகவும், கடந்த காலங்களில் நடந்த தவறுகளைத் தான் திரும்ப செய்யப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Next Story