ஆப்கான் நிலவரம் -மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆக்கிரமித்த பிறகு அங்கே நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலவரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய சூழல், அங்கிருந்து இதுவரை மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர், அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவது, உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story