அமெரிக்கா ஆயுதம் வழங்கியது ஏன்? - தலிபான்கள் வலுவாக போரிட யார் காரணம்?

ஆப்கானிஸ்தானில் வரலாறு திரும்பும் நிலையில் தலிபான்கள் யார்...? அவர்கள் இவ்வளவு வலுவாக போரிடுவது எப்படி.?
அமெரிக்கா ஆயுதம் வழங்கியது ஏன்? - தலிபான்கள் வலுவாக போரிட யார் காரணம்?
x
ஆப்கானிஸ்தானில் வரலாறு திரும்பும் நிலையில்  தலிபான்கள் யார்...? அவர்கள் இவ்வளவு வலுவாக போரிடுவது எப்படி.? என்பது உள்பட 40 ஆண்டுகால போர் வரலாற்றை விவரிக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்..1919-ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலைப் பெற்ற ஆப்கானிஸ்தானில், முடியாட்சி முறை தொடர்ந்தது. 1970-களில் நாட்டில் ஊழலுக்கு எதிராக புரட்சி வெடித்ததை தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு, கம்யூனிச சித்தாந்தம் கொண்ட, ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயக கட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.  
ஆனால் அவர்களுடைய பெண் கல்வி உள்ளிட்ட சீர்திருத்தங்களை அடிப்படைவாதிகள் ஏற்காததால் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்பட்டது.  
அங்கு கம்யூனிச அரசை காப்பாற்ற 1979 டிசம்பர் 25 ஆம் தேதி ராணுவத்தை அனுப்பிய ரஷ்யா,  கம்யூனிச தலைவர் முகமது நஜிபுல்லாவை அதிபராக்கியது. மறுபுறம் ஆப்கான் கம்யூனிச அரசை வீழ்த்தவும், ரஷ்யாவை எதிர்க்கவும், பாகிஸ்தானில் முஜாகிதீன்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா உதவியது.

Next Story

மேலும் செய்திகள்