ஆப்கான் நிலவரம் - ஜோ பைடன் விளக்கம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கான் நிலவரம் - ஜோ பைடன் விளக்கம்
x
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்போது பேசிய அவர், 2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் காரணமாக தீவிரவாதிகளை ஒழிப்பதற்காகவே அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் சென்றதாகவும், ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்காக அங்கு செல்லவில்லை  எனவும் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு உள்ளதால், அமெரிக்க ராணுவம் வெளியேற முடிவு செய்த‌தாக ஜோ பைடன் விளக்கம் அளித்தார்.மேலும், தலிபான்களை ஒடுக்க ஆப்கன் ராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்த‌தாகவும், ஆனால் ஆப்கன் ராணுவத்தினர் போராடாமலேயே சரணடைந்து விட்டதாக பைடன் குற்றம்சாட்டினார்.ஆப்கன் அரசியல் தலைவர்களிடம் ஒற்றுமை இன்மையே தலிபான்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும், ஆப்கன் அரசியல்வாதிகள் நாட்டை கைவிட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என ஜோ பைடன் விமர்சித்தார்.ஆப்கன் ராணுவமே போராட தயாராக இல்லாத சூழலில், அமெரிக்க வீரர்களை போரில் இழப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பிய ஜோ பைடன்,ஆப்கனில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.எதிர்பார்த்த‌தை விட தலிபான்கள் வேகமாக ஆப்கனை கைப்பற்றி விட்டதை ஒப்புக்கொண்ட ஜோ பைடன், காபூலில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறினார்.ஆப்கனில் உள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அங்குள்ள அமெரிக்கர்களை தாக்கினால் தலிபான்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த ஜோ பைடன்,ஆப்கன் மக்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடரும் என்றும் உறுதி அளித்தார்.

 


Next Story

மேலும் செய்திகள்