இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு - 48 மணி நேரத்தில் மீட்க திட்டம்
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் 48 மணி நேரத்தில் மீட்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் 48 மணி நேரத்தில் மீட்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றி உள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்து உள்ளது. பல்வேறு நாடுகள் தூதரகங்களை காலி செய்து, தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களை அடுத்த 48 மணி நேரத்தில் மீட்க மத்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இந்தியாவிலிருந்து காபூலுக்கு செல்ல ஏர் இந்தியா விமானம் ஒன்று தயார் நிலையில் உள்ளது. மேலும், இரண்டு விமானங்களை தயார் நிலையில் வைக்குமாறு மத்திய அரசு ஏர் இந்தியா விமான நிறுவனத்தை அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல், C-17 Globemaster எனும் ராணுவ விமானத்தையும் மத்திய அரசு தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டு உள்ளது.
Next Story