மலேசிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் முஹைதீன் யாசின்
மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் திடீரென்று பதவி விலகி உள்ளார். இதனால், மலேசிய அரசியலில் புதிய குழப்பம் ஏற்ட்டு உள்ளது.
மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் திடீரென்று பதவி விலகி உள்ளார். இதனால், மலேசிய அரசியலில் புதிய குழப்பம் ஏற்ட்டு உள்ளது.மலேசிய பிரதமராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்றவர் முஹைதீன் யாசின். மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவரான இவர், முன்னாள் பிரதமர் மஹாதீர் முகமது பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பிரதமரானார். இவரது ஆட்சிக்கு நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதிலும், யாசின் நிர்வாகம் சிறப்பாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சி எம்.பிக்கள் 15 பேர் திரும்பப் பெற்றனர். இதனால், யாசின் நிர்வாகம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இந்நிலையில், மலேசிய அரசர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்தித்து யாசின் தனது ராஜினாமா கடிதத்தை அளித்து உள்ளார். இதனால், 17 மாத கால யாசினின் ஆட்சி மலேசியாவில் முடிவுக்கு வந்து உள்ளது. யாசின் திடீரென்று பதவி விலகியதால், மலேசியாவில் அடுத்த பிரதமர் யார் என்று குழப்பம் உருவாகி உள்ளது.
Next Story