ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு
ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது.
ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. ஹைதியில் நேற்று முந்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவானது. போர்ட் ஆ பிரின்சில் இருந்து 118கிலோ மீட்டர் தொலைவில், இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் பலி எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. 5 ஆயிரத்து 700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பல உயரமான கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகின. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். மீட்புப்பணியில் அந்நாட்டு இராணுவம் ஈடுபடுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து, 1 மாத காலத்திற்கு அவசர நிலையை பிரதமர் ஏரியல் ஹென்றி பிரகடனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story