பூமியைப் பாதுகாக்க நடைபயணம் : 11 வயது சிறுவன் தீவிர முயற்சி

இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் பூமியின் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
பூமியைப் பாதுகாக்க நடைபயணம் : 11 வயது சிறுவன் தீவிர முயற்சி
x
 ஜூட் வாக்கர் என்ற 11 வயது சிறுவன் லண்டனில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்றம் வரை, கார்பன் வரியை ஆதரித்து நடைபயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுச் சூழல் ஆர்வலர் க்ரேடா தென்பர்க்கைப் போலவே, புவியைப் பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டு கால நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், கார்பன் வரிக்கு ஆதரவாக மக்களை கையெழுத்திடவும் இவர் வலியுறுத்தியுள்ளார். இதுவரை 57 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட நிலையில், 1 லட்சம் பேரின் ஆதரவு கிடைத்தால் பாராளுமன்றத்தில் அது பேசு பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்