ஈரானில் கொரோனா 5ம் அலை : 42 ஆயிரத்தைக் கடந்த தினசரி பாதிப்பு
ஈரானில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தக் கோரி, அந்நாட்டு மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா 5ம் அலையில், தினசரி பாதிப்பு ஈரானில் 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், நாட்டின் முதன்மைப் பிரச்சினையாக கொரோனா பரவல் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி இறக்குமதி மற்றும் உற்பத்திப் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அயத்துல்லா அலி கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story