செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் - ஆள்சேர்க்கும் பணியை தொடங்கிய நாசா
2037ஆம் ஆண்டு செவ்வாய் கிரத்திற்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டிருக்கும் நாசா விண்வெளி ஆய்வு மையம், அதற்கான நடைமுறையை தொடங்கியிருக்கிறது. இந்த அரிய வாய்ப்புக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை தற்போது பார்க்கலாம்....
பயிற்சி பெறுவதற்கு செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் விண்ணப்பங்களை பெறும் நாசா, யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம் என்ற விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி விண்ணப்பம் செய்பவர்கள் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு 30-ல் இருந்து 55-க்குள் இருக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியம் உள்ளவர்களாகவும், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
அறிவியல், தொழில்நுட்பம், எஞ்ஜினியரிங், கணித துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட துறைகளில் 2 ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஆயிரம் மணி நேரம் விமானியாக பணியாற்றியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை நாசா பட்டியலிட்டுள்ளது.
இவ்வாறு தேர்வு செய்யப்படுவோரின் தனியுரிமைக்கு குந்தகம் நேரிட்டாலோ, மருத்துவ பரிசோதனையில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
Next Story