எகிப்து அரசர் குஃபுவின் பிரம்மாண்ட படகு - அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்ட படகு

எகிப்து அரசர் குஃபுவின் பிரம்மாண்ட படகு அந்நாட்டில் உள்ள மிகப்பெரும் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
எகிப்து அரசர் குஃபுவின் பிரம்மாண்ட படகு - அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்ட படகு
x
மிகப்பழமையானதும் பெரியதுமான மரத்தாலான இப்படகு, கிசா பிரமிடிலிருந்து எகிப்து அருங்காட்சியகத்திற்கு மிகுந்த சிரத்தையோடு கொண்டு வரப்பட்டது. 42 மீட்டர் நீளமும், 20 டன் எடையும் உள்ள இந்தப்படகைக் கொண்டு வர 48 மணி நேரம் பிடித்தது. 4 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான இப்பொக்கிஷம் 1954ம் ஆண்டு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்