ஈரான் அதிபராக இப்ராஹிம் ரைசி பதவியேற்பு : பதவியேற்பில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு
ஈரான் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள இப்ராஹிம் ரைசி உடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
2 நாள் பயணமாக ஈரான் சென்றுள்ள ஜெய்சங்கர், தலைநகர் டெக்ரானில் நடைபெற்ற புதிய அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். இதை தொடர்ந்து அதிபர் இப்ராஹிம் ரைசியை சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து, புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
Next Story