கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சீன வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு
x
கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சீன வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரசின் தோற்றம் குறித்த முதற்கட்ட ஆய்வு சீனாவில் நடைபெற்றது.சீனாவின் வூஹான் மாகாணத்திற்கு சென்ற உலக சுகாதார அமைப்பினர் அங்குள்ள ஆய்வகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் முழு சுதந்திரத்துடன் ஆய்வு மேற்கொண்டதாகக் கருத்து தெரிவித்தனர்.சீன அதிகாரிகளும், மருத்துவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறப்பட்ட கருத்தில் உண்மையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.ஆனால், ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள், கொரோனா வைரசின் தோற்றம் குறித்த 2ஆம் கட்ட ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தின.கொரோனா வைரசானது ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்கலாம் என்ற கருத்தையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உறுதியாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்